ஸ்ரீமடத்தில் அக்னிஹோத்ர சதஸ் நடைபெற்றது - ஜூலை 13 – 15, 2012
ஸ்ரீ ஆதி சங்கர பகவத்பாதாச்சார்யாள் இயற்றிய "சோபன பஞ்சகம்" என்ற ஸ்தோத்திரத்தில் ஜீவர்களுடைய உத்தாரணத்திற்கு நாற்பது ஸ்லோகங்களை கூறியுள்ளார்கள். அதில் முதல் இரண்டு ஸ்லோகம் "வேதோ நித்யமதீயதாம் ததுடிதம் கர்மாஸ்வனுஷ்டீயதாம்". இந்த ஸ்லோகத்தின் அர்த்தம் என்னவென்றால் ஒருவன் அவன் கற்ற வேதத்தை முறையாக பாராயணம் செய்ய வேண்டும், மற்றும் வேதத்தில் இருக்கும் கட்டளைகளை முறையாகச் செய்ய வேண்டும். இன்றைய காலகட்டத்தில் ஸ்ரீ ஆதி சங்கரரின் இந்த உபதேசத்தை அக்னிஹோத்ரிகள் பின்பற்றி வருகிறார்கள்.
ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடம், ஸ்ரீ ஆச்சார்ய ஸ்வாமிகளின் அனுக்ரஹத் துடன், அக்னிஹோத்ரிகளுக்கான ஒரு சதஸ் காஞ்சிபுரம், ஸ்ரீமடத்தில் மூன்று நாட்களுக்கு நடைபெற்றது. இந்த சதஸ் கடந்த 8 ஆண்டுகளாக ஸ்ரீ மடத்தில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெற்று வருகிறது. காஞ்சி ஸ்ரீ ஆச்சார்ய ஸ்வாமிகளின் நம்பிக்கை என்னவெனில் அக்னிஹோத்ர காரியமும் அதை சுற்றி இருக்கும் யக்ஞமும் லோக க்ஷேமம் மற்றும் எல்லோருடைய நல்லதிற்காக தவறாமல் செய்ய வேண்டும் என்பதே. ஒவ்வொரு நாளும், ஸ்ரீ ஆச்சார்ய ஸ்வாமிகளின் முன்னிலையில் காலை, மாலை இருவேளையிலும் இரண்டு மணி நேரம் இந்த சதஸ் நடைபெற்றது. நம் முன்னோர்கள் ஆன ரிஷிகள் குடுத்த சூத்ரங்களில் குறிப்பிட்டிருக்கும் வேதத்தில் இடப்பட்ட கட்டளைகளை பற்றியும் அதற்கான சரியான அர்த்தங்களை பற்றியும் கடுமையான விவாதங்கள் இந்த சதஸில் நடைபெற்றன. ஸ்ரீ ஆச்சார்ய ஸ்வாமிகள் சதஸ் பூர்த்திஆகும் தினம் அன்று அக்னிஹோத்ரிகளுக்கு சம்பாவனை மற்றும் அருள் வழங்கினார்கள்.